tamilnadu

img

ஒடிசா: சூரிய கிரகணத்தையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒடிசாவில் சூரிய கிரகணத்தையொட்டி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது.  இதையொட்டி ஒடிசா மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தேஷ் வெளியிட்டுள்ளார்.
சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு புவனேஸ்வரில் உள்ள கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம். 
 

;