tamilnadu

img

கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை

சென்னை,ஆக.4- சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடை பெற்றது. இந்திய கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை யுடன் இணைந்து பேரிடர் மீட்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த 3 நாட்களாக நடத்தி வருகின்றன. புயல் வெள்ளம் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி என்ற தலைப்பில் நேற்று முன்தினம் முதல் பேரிடர் மீட்பு பயிற்சி நடை பெற்றது. முதல் நாளில் (ஆக.2) சென்னை கலை வாணர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. 2 வது நாளாக சென்னை தீவுத்திடலில் பேரிடர் மிட்புப் பணிகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கடைசி நாளான ஞாயிறன்று(ஆக.4) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடைபெற்றது.

சென்னையில் பட்டினப் பாக்கம் சீனிவாசபுரத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திடீரென சுனாமி வந்தால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது பற்றியும் தண்ணீரில் மூழ்கியவர்க ளுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் ஒத்திகையின் போது விளக்கப்பட்டது. இதற்காக கடலோர பாதுகாப்பு படை பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்று சுனாமி ஒத்திகையை நடத்தினர். கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராம நாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திரு நெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சுனாமி ஒத்திகை நடத்த ப்பட்டது. இதற்கு முன்பு இது போன்று பலமுறை சுனாமி ஒத்திகை நடத்தப்பட்டு ள்ளது. அப்போது சில நேரங்களில் கடலோரப் பகுதிகளில் சுனாமி வந்து விட்டதாக பீதியும் ஏற்பட்டு ள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுனாமி ஒத்திகை தொடர்பாக முன்கூட்டியே கடலோரங்களில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்ட னர். சுனாமி பாதுகாப்பு ஒத்திகையை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என்று முன்கூட்டியே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

;