tamilnadu

திருப்பூர் மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு அலைபேசி செயலி பயிற்சி

திருப்பூர், பிப். 12- முழு சுகாதாரம் குறித்த கிராம சுகாதார ஊக்குவிப் பாளர்களுக்கான அலைபேசி செயலி பயிற்சி திருப்பூ ரில் புதனன்று நடைபெற்றது. இதில்,திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாராந்திர மக்கள் குறைதீர்ப்புக் கூட்டரங் கில் கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கான அலைபேசி செயலி பயிற்சி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிக ளில் 265 கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு, அலைபேசி செயலி பயிற்சி அளிக்கப்பட்டது. இம்மு காமிற்கு, திருப்பூர் மாவட்ட வீட்டுவசதி மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் எம். மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பாளர் கே.கந்தசாமி, மாவட்ட பயிற்றுநர்கள் சி.சங் கீதா, எம்.சுதா, அங்கயற்கண்ணி, ராதிகா மற்றும் சித்ராதேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், கிராமப்புற வீடுகளின் தூய்மை, திடக் கழிவு மேலாண்மை, தனிநபர் இல்ல கழிப்பிடம், பள் ளிகளில் சுகாதாரம், வீட்டுத்தோட்டம், கிராம சுகா தார செவிலியர்களின் செயல்பாடு தொடர்பான கள விவரங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு,  மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தூய்மை தமிழகம் அலைபேசி செயலியை கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்கள் நேரடியாக பயன்படுத்தி மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை நேர டியாக அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய் யப்பட்டது.  இதனை அலைபேசியில் எப்படி பயன்படுத்து வது என்பது தொடர்பாக கிராம சுகாதார ஊக்குவிப் பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

அடிக்கடி பழுதாகும் நீரேற்று மோட்டார் பம்ப்  அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர், பிப். 12 – திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தில் நீரேற் றம் செய்யும் மோட்டார் பம்ப் அடிக் கடி பழுதடைகிறது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான குடி நீர் வழங்குவதில் இப்பிரச்சனைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. திருப்பூர் மாநகரின் வடக்குப் பகு தியில் உள்ள 10ஆவது வார்டு தியாகி பழனிசாமி நகர் குடியிருப் புகளில் குடிநீர் விநியோகம் இரண்டு வார காலம் வரை தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான என். கோபாலகிருஷ்ணன் விசாரித்த போது, அவிநாசி சாலை நீரேற்று நிலையத்தில் நீரேற்றம் செய்யும் மோட்டார் பம் பழுதடைந்துள்ள தாக தகவல் கிடைத்தது. எனினும் மக்களின் அத்தியாவசியத் தேவை யான குடிநீர் விநியோகம் செய்வ தற்கு மாற்று ஏற்பாடாக, நீரேற்று நிலையங்களில் மாற்று (ஸ்பேர்) மோட்டார் பம்ப் வைக்கப்பட்டிருக் கும். அந்த பம்ப்பும் பழுதடைந்தி ருப்பதாக மாநகராட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிரதான மோட்டாரும், மாற்று மோட்டாரும் பழுதான நிலையில் மாநகரின் மையத்தில் உள்ள குடியி ருப்புகளில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. இது பற்றி என்.கோபாலகிருஷ் ணன் மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.  இந்த மோட்டார் பம்ப்-ஐ சரி செய்வதற்கு புனே நகரில் இருந்து ஆட்கள் வர வேண்டியுள்ளது. இன் னும் நான்கு தினங்களில் இப்பிரச் சனை சரி செய்யப்படும் என்று ஆணையர் க.சிவக்குமார் தெரிவித் ததாக என்.கோபாலகிருஷ்ணன் கூறினார். மேலும் கடந்த காலங்களில் குடி நீரேற்றம் செய்ய மாற்று மோட்டார் கள் தயார் நிலையில் இருக்கும், பிர தான மோட்டார் பம்ப் பழுதடைந் தால் உடனடியாக மாற்று மோட் டார் பம்ப்-ஐ பொருத்தித் தாமதம் இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது மாற்று மோட் டார் பம்ப் கூட தயார் நிலையில் இல் லாதது மாநகராட்சியின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. ஊழல், மெத்தனப் போக்கின் காரணமாக மக்களுக்குக் குடிநீர் வழங்குவது கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலம் தொடங் கும் நிலையில் மாநகராட்சி நிர்வா கம் இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து நீரேற்று நிலையங்களிலும் மோட் டார்களை சோதனை செய்து பார்ப்ப தும், மாற்று ஏற்பாடுகளை செய்து வைப்பதும் அவசியம் என்று என்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

விபத்தில் பனியன் தொழிலாளி பலி

திருப்பூர், பிப். 12- திருப்பூர் நெருப்பெரிச் சல் நகரை சேர்ந்தவர் கலிய பெருமாள் (45). இவர், பனி யன் நிறுவனத்தில் வேலை  செய்து வருகிறார். இவர், கடந்த 10ஆம் தேதியன்று பெருந்தொழுவு அருகே யுள்ள வலுப்பூரம்மன் கோவிலுக்கு தனது இருசக் கர வாகனத்தில் சென்றுள் ளார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டி ருந்த கார் மீது மோதினார். இதில், படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம னையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று உயி ரிழந்தார்.இதுகுறித்து திருப் பூர் காவல் துறையினர் விசா ரனை மேற்கொண்டு வரு கின்றனர்.

தண்ணீர் தொட்டி கட்டும் பணி துவக்கம் 

அவிநாசி, பிப்.12- அவிநாசி அருகே கருவலூரில் சாலையில் நிறுத்தப்பட்டி ருந்த தண்ணீர் தொட்டி கட்டும் பணி தீக்கதிர் செய்தியின் எதி ரொலியாய் மீண்டும் துவங்கியுள்ளது. அவினாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளை யம் செல்லும் சாலையில் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் குடி நீர் கசிவை சீரமைத்து, பழமை வாய்ந்த தொட்டியை அப் புறப்படுத்தினர். இதன்பின்ன குடிநீர் தொட்டி அமைக் கும் பணிகள் நடைபெறாமலும், குழிகளை மூடாமலும் பல நாட்களாக  கிடப்பில் போட்டிருந்தனர்.இதன்காரணமாக சாலை அருகே பள்ளம் இருப்பதால் அவ்வப்போது விபத்து ஏற்படுவது தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளி யாகி இருந்தது.  இச்செய்தியின் எதிரொலியாக புதனன்று தண்ணீர் தொட்டி கட்டும் பணி மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.