tamilnadu

பி.யூ.சனூப் கொலையில் மேலும் மூவர் கைது...

குன்னம்குளம்:
கேரளத்தில் நடந்த  சிபிஎம் புதுசேரிகிளை செயலாளர் பி.யூ.சனூப் கொலை தொடர்பாக மேலும் 3 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆர்எஸ்எஸ்- பாஜக- சங்பரிவார்கும்பலைச் சேர்ந்த சிற்றிலங்காட்டைச் சேர்ந்த அபைஜித் (19), சதீஷ் (35), ஸ்ரீராக் (24) ஆகியோரை குன்னங்குளம்காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் நேரடியாக இந்த கொலையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.கொலை நடந்த பிறகு, வீட்டைவிட்டு வெளியேறி, மூன்று நாட்களாகதலைமறைவில் இருந்தனர். இவர்கள் மூவரும் பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இதோடு இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற காவலில் இருந்து  முக்கிய குற்றவாளி நந்தனனை விசாரணைக்காக காவல்துறையினர் தங்களது காவலில் எடுத்துக்கொண்டனர். வெள்ளியன்று கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுடன் சம்பவம் நடந்த சிட்டிலங்காடு பகுதிக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.