ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு
சென்னை:
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக் கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்ககோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த அமைச்சர்கள் செங் கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர் வலியுறுத்தினர்.
**************
வேலூர் பொறியாளரின் வங்கிக் கணக்கு முடக்கம்
வேலூர்:
வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல் வத்தின் 10 வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பா வங்கிக் கணக்குகள், லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் முடக்கினர். பன்னீர் செல்வம் உறவினர்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்துவருகின்றனர்.
**************
முதல்வருடன் வைகோ சந்திப்பு
சென்னை:
முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, முதல்வரின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் நேரில் வந்து துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
**************
அமைச்சரிடம் முதல்வர் நலம் விசாரிப்பு
சென்னை:
வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் துரைக் கண்ணுவிடம் காணொலி காட்சி வழியாக பேசி, நலம் விசாரித்தார்.மேலும் அவரது உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் மருத்துவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
**************
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு: மேலும் 3 பேர்
சென்னை:
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களாக மேலும் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் தேனி எல்.மூக்கையா, வேலூர் முகம்மது சகி, திருச்செங்கோடு கந்தசாமி ஆகியோர் இடம்பெறுகிறார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைருகன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.