tamilnadu

img

குற்றவாளியை கைது செய்யக்கோரி தேனியில் ஆவேச மறியல்

மனநலம் குன்றிய 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 

தேனி, செப்.23- மனநலம் குன்றிய தலித் சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டா மை ஒழிப்பு முன்னணி, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆவேச  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட த்திற்கு தடை விதித்ததால் சாலை மறி யல் போராட்டமாக மாறியது. தேனி அருகே பூதிப்புரம் கிராம த்தைச் சேர்ந்த தலித் பிரிவை சேர்ந்த மன நலம் குன்றிய 7 வயது சிறுமி. இவர்  கடந்த 3 ஆண்டுகளாக தேனி அருகே  அரண்மனைப்புதூர் வியலால் உள்ள  தன்வந்திரி வானவில் மனநல காப்ப கத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில்  கடந்த 19-ம் தேதி வீடு திரும்பிய அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பிறப்பு உறுப்பு முழுவதும் ரத்த  காயம் ஏற்பட்டும் கடிபட்டும் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் உரிய சட்டப்  பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து  கைது செய்ய வேண்டும். பாதிக்க ப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க  வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தி ற்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேர வை, அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் அலுவ லகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.

காவல்துறையினர் தடை

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையி னர் தடை விதித்தனர். அப்போது போரா ட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையி னரிடம் சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு செல்வதாக கூறினார். காவல்துறையினர் செவி சாய்க்க வில்லை. இதனால் மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது காவல்துறை யினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோ ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தலைவர்களை ஆட்சியர் அலு வலகத்திற்கு அழைத்து சென்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்டச் செயலாளர் இ.தர்மர், தமிழ்புலிகள் கட்சி நிறுவனர் நாகை.திருவள்ளுவன், ஆதி தமிழர் பேரவை மாநில துணைத் தலைவர் வீரபாண்டி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.வெண்மணி, மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட தலைவர் கே.தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.யிடம் முறையீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடே சன், மாவட்ட செயற்குழு உறுப்பின ர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கர சுப்பு, ஏ.வி.அண்ணாமலை மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை வர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வீ.பாஸ்கரனை சந்தித்து பேசினர். அப்போது குற்றவாளியை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தீஒமு வலியுறுத்தல்

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநில துணைப் பொதுச்  செயலாளர் மு.கந்தசாமி செய்தியாளர்க ளிடம் பேசுகையில், மனநலம் பாதிக்க ப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்த உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இச்சிறுமி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்தி றனாளிகள் பாதுகாப்பு சட்டம் 5ஜெ  மற்றும் எம் பிரிவின் கீழ் கூடுதலாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இழப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உய ர்ந்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி வருகிற 4 ஆம் தேதி தேனியில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடை பெறும் என்றார்.
 

;