சென்னை, மே 4- சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக முதன்மை நிர்வாக அலுவலகத்தில் சென்னை கொரோனா தடுப்பு மற்றும் கண்கானிப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்தி கேயன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், போர்க்கால அடிப்படையில் தனிப்ப டுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகி றது. பல்வேறு மாவட்டங்களிலும் கோயம்பேடு பகுதியில் இருந்து சென்றவர்களுக்கு சோதனை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். 98 விழுக்காடு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள் ளது, அதிக அளவில் சோதனைகள் எடுக்கப்படுவ தால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எண்ணிக்கையை வைத்து பயப்படத் தேவையில்லை. மக்கள் பதற்றமடை யாமல் இருக்க வேண்டும்.
அறிகுறி இல்லாமல் தொற்று இருப்பதால் மருத்துவ மனைகளில் மக்கள் குவிய வேண்டாம். கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் பதற்றம் கொள்ளத் தேவை இல்லை. இறப்பு விகிதம் 1 விழுக்காடுதான் உள்ளது. நகர்புறங்களில் தள்ளுவண்டி கடைக்காரர்க ளுக்கும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளது. கோயம்பேடு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு குழு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . கண்கா ணிப்பு பணிகளில் அவர்களும் ஈடுபடுவார்கள். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம்.
சென்னையில் நாளொன்றுக்கு 3,600 சோதனை கள் எடுக்கப்படுகின்றன. வீட்டுக்கு வீடு சென்று ஆய்வு மேற்கொள்பவர்களில் சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, எனவும் ஒருசில பகுதிகளில் ஆய்வின் வேகம் குறைந்துள்ளது. அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.