tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி உறுதி

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை, டிச. 12 - உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமை யிலான அணி மகத்தான வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்  ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் ஆகியோர் வியாழனன்று (டிச.12) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவரு டன் கலந்துரையாடினோம். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மாவட்டங் களில் தோழமைக்கட்சிகளுடனான இடப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூக மாக முடியும்” என்றார்.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களிடம் இடப்பகிர்வை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று அறி வுறுத்தி இருப்பதாக எங்களிடம் தெரிவித் தார். சிபிஎம் தலைவர்கள், மாவட்டச் செய லாளர்கள், அனைத்து மாவட்டங்களிலும் பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மகத்தான வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “சதவீத அடிப்படையில் இடம் கேட்டு திமுகவிடம் பட்டியல் கொடுக்கவில்லை. உள்ளாட்சியில் ஏற்கெனவே சிபிஎம் வெற்றிபெற்ற இடங்கள், போட்டியிட்ட இடங்கள், வலுவான, வாய்ப்புள்ள இடங்களை பட்டியலிட்டு அந்தந்த மாவட்டங்களில் கொடுத்துள்ளோம். அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து விடும். ஒன்றிரண்டு இடங்களில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்தால் தலைமையில் பேசிக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் கூறியிருக்கிறார். அதன்படி சுமூகமாக இடப்பகிர்வு முடியும்” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் எழுத்துப் பூர்வமான நகல் கிடைக்கவில்லை. அது கிடைத்தபிறகு கருத்து தெரிவிப்பதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். 

;