சென்னை, நவ. 18- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவ தற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த பழனி சாமி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பிரமணியம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திங்களன்று (நவ.18) கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் சுப்பிர மணியம் புதிய தேர்தல் ஆணையச் செயலாள ராக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.