குடியாத்தம், ஏப்.12- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தோல் பதனிடும் மற்றும் `ஷூ தயாரிப்பு கம்பெனிகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகங்கள் சம்பளம் வழங்க மறுத்து வருவதால் தொழி லாளர் நலத்துறை ஆணையர் தலையிட வேண்டும் என்று செங்கொடி சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட டேனரில் மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பி. ராமச்சந்திரன் தொழிலாளர் துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் அதன் விபரம் வருமாறு:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழில் மற்றும் ஷூ தயா ரிப்பு தொழிலில் நேரடியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரும் மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் மொத்தமாக 3 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்யக் கூடியவர்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் காரண மாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள தால் தொழிலாளர்கள் வேலை வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த தொழிலாளர்களை நம்பி வாழும் குடும்பங்களில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல பணம் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு கூடபணம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்திற்கு தனியார் கம்பெனி நிர்வாகங்களும் தொழிலாளர்க ளுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர்) சில கம்பெனி களை தவிர மற்ற கம்பெனிகள் அமல்ப டுத்துவது இல்லை. தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் டேனரி மற்றும் கம்பெனி நிர்வாகிகள் உரிமையாளர் களிடம் கேட்கிறபோது எங்களுக்கு எந்த உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை என்று சம்பளம் வழங்க மறுக்கிறார்கள். எனவே தாங்கள் தலையிட்டு டேனரி மற்றும் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கம்பெனி நிர்வாகங்கள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.