tamilnadu

img

அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்குக!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.13-  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில் அனைத்து குடும்பங்க ளுக்கும் தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும். அனைத்துக் கட்சி களின் ஆலோசனைகளை பெற்று மாநிலத் தின் நெருக்கடியை சமாளிப்பது குறித்து அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப் படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை 30.4.2020 வரை நீடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளி யிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யிருப்பதாக தலைமை செயலாளர் செய்தியா ளர்களிடம் கூறினார். சனிக்கிழமை மாலை பேட்டியளித்த தமிழகஅரசின் தலைமைச் செயலாளர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் முடிவெடுத்து வெளியிடு வார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சரே மேலும் 16 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். முதலில் ஏன் பிரதமர் அறி விப்பார் என்று கூறினார்கள் என தெரிய வில்லை.  

ஏற்கெனவே மூன்று வார காலம் ஊர டங்கு அமலில் இருந்த நிலையில் கூடுதலாக இரண்டு வார காலத்திற்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது, முன்பு அளித்த நிவா ரணத்தை விட இன்னும் கூடுதலாக அளிப்பது தான் நியாயமானது. ஆனால் முதல்வரின் அறிவிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; கட்டிடத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற் கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தவிர, வேறு எந்த நிவாரண உதவியும் அறிவிக்கப் படாதது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நடை முறை படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்து பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டு மல்ல, வாழ்வாதாரமும் முற்றாக முடங்கி யுள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவாரண உதவிகள் எதுவும் வழங்காமல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்கும். பட்டினிச் சாவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஊரடங்கிற்கான நியாயத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரு கின்றனர். ஆனால் அதே நேரத்தில், மக்க ளின் பிரச்சனைகளை அரசு முழுமையாக புரிந்து கொண்டுள்ளதாக தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாயாவது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலா வது, உடனடியாக அனைத்து குடும்பங்களுக் கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

அதேபோன்று விவசாய தொழிலா ளர்கள் வேலையிழந்து கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், இந்த ஊரடங்கினால் கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ள விவசாயிகள், சிறு,குறு தொழில் முனை வோர் மற்றும் அனைத்துப் பகுதி தொழிலா ளர்களை பாதுகாப்பதற்கான நிவாரண உதவி கள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைப்பது தற்போதே மாநி லத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சனை யாகியுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதில் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஊரடங்கின் தேவையை மக்கள் உணர்ந்து ஒத்துழைப்பு தருகின்றனர். எனினும் பல்வேறு தேவைகளின் பொருட்டு மக்கள் வாகனங்களில் வெளியில் வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் நிலையில், இந்த வாகனங்கள் பயனற்று போகும் நிலை ஏற்படும்.  ஊரடங்கை மீறி இருந்தால் அவர் களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு வாக னங்களை ஒப்படைப்பதோடு, வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துக!

தமிழகத்திற்கு உரிய நிவாரண நிதியை தர மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இடர்சூழந்த இந்த வேளையிலும் கூட தமிழகத்தை பல்வேறு வகையிலும் வஞ்சிக்கிறது. மாநில அரசு மருத்துவ கருவி கள் இறக்குமதி செய்வதை கூட தடுக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒன்றுபட்ட நிலையை எடுத்துரைக்கவும், மாநில மக்கள் சந்திக்கும் பிரச்சனையை விவாதித்து முடி வெடுக்கவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு மாநில அரசை தொடர்ந்து வலி யுறுத்தி வந்த போதும், அதிமுக அரசு இதில் தேவையற்ற வறட்டு பிடிவாதம் பிடிக்கிறது. இப்போதாவது அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளை பெற்று மாநிலத்தின் நெருக்கடியை சமாளிப்பது குறித்து கருத்தொற்றுமையை அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும்.

திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதனன்று நடைபெற வுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதித்து தமி ழக மக்களின் நலன் காப்பதற்கான முடிவு கள் எடுக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.