குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
சேலம், மே 11- சாதிய ஆதிக்க சக்தியினரின் வன்முறை வெறியாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஓம லூர் விஷ்ணு பிரியன் குடும்பத் திற்கு உரிய நிவாரணம் மற்றும் படுகொலை செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, சேலம் மாவட் டம், ஓமலூர்நாலுகால்பாலம் அருகேயுள்ள புதுக்கடை ஆதிதி ராவிடர் காலனி பகுதியில் வசிக் கும் தலித் சமூகத்தைச் சேர்ந் தவர் முருகன். இவரின் மூத்த மகன் விஷ்ணுபிரியன், எம்சிஏ படித்து முடித்து, சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இளைய மகன் நவீன்குமார் பிஇ முடித்து கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலை யில் கொரோனா ஊரடங்கு கார ணமாக மகன்கள் இருவரும் தனது சொந்த ஊரான புதுக்க டைக்கு வந்து தாய், தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள் ளியன்று காமலாபுரம் அருகே உள்ள பொட்டிபுரம் சுற்றுவட் டாரத்தின் ஆதிக்க சாதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தலை மையில் ஒரு கும்பல் இரு சக்கர வாகனத்தில் குடிபோதையில் புதுக்கடை ஆதிதிராவிடர் கால னிக்கு வந்து அங்கிருந்தவர் களிடமும் தகராறில் ஈடுபட்டுள் ளனர். இதையடுத்து அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் காவல்து றைக்கு தகவல் கொடுத்துள்ள னர். ஆனால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இச்சூழலில் ஆதிக்க சாதியை சேர்ந்த செந்தில் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு காலனிக்குள் நுழைந் துள்ளனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பதற்றமான சூழல் ஏற்படவே முருகனின் இளைய மகன் நவீன்குமார் வீட்டின் கேட்டை அடைக்க முற்பட்டுள் ளார். அப்போது அந்த கும்பல் நவீன்குமாரின் சாதியைச் சொல்லி திட்டியதோடு கையிலி ருந்த ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற விஷ்ணுபிரியன் மீதும் அந்த வன்முறைக் கும்பல் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படு காயம் அடைந்த விஷ்ணுபிரி யன் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாப மாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, பிரச்சனை அத்து மீறி போய் விடுமோ என்ற அச்சத் தில் பொதுமக்கள் தகவல் கொடுத்தபோதும், உரிய நேரத் திற்குள் போலீசார் அங்கு வரா தது மட்டுமின்றி மிகவும் அலட்சியமாக பதிலளித்துள் ளனர். இதன்காரணமாகவே பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விரைந்து நடவ டிக்கை எடுத்து குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற் றுத்தர வேண்டும். இதேபோல் தகவல் கொடுத்தும், உடனடி யாக நடவடிக்கை எடுக்காத சம் மந்தப்பட்ட காவலர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படுகொலை செய்யப் பட்ட விஷ்ணுபிரியனின் குடும் பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். விஷ்ணுபிரியன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் விதவை ஓய்வூதி யம் வழங்க வேண்டும். படுகா யத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவீன்கு மாருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
முன்னதாக, சேலத்தில் ஆதிக்க சாதியினரின் வெறியாட் டத்தில் படுகொலை செய்யப் பட்ட விஷ்ணுப்பிரியன் இல்லத் திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தை வேல், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியாகவுண்டர் ஆகியோர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.