tamilnadu

img

தமிழக காவல்துறையின் 8,826 காலிபணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத்து தேர்வு!

தமிழக காவல்துறையில் 8,826 காலி பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

8,826 காலி பணியிடங்களுக்கு  சுமார் 3.22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.  சென்னையில் மட்டும் 13 மையங்களில் காவலர் தேர்வு நடைபெறுகின்றது.இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவர்
 

;