மதுரை, மார்ச் 18- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் நீதித்துறையின் மாண்பு களையும் சிதைக்கும் விதமாக, ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நிகழ்ச்சிநிரல் களுக்கு ஏற்றவாறு தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்திருப்பது கடும் கண்ட னத்திற்குரியது என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் முழக்கமிட்டது.
மதுரையில் சங்கத்தின் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்கறிஞரும் மதுரை மாவட்ட துணைத் தலைவருமான என்.பழனிசாமி தலைமையேற்றார். சங்க த்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.முத்துஅமுதநாதன், மாவட்டத் தலை வர் ஆர்.சுப்புராஜ், மாநில செயலா ளர் ஷாஜி செல்லன், தேசியக் குழு உறுப்பினர்கள் சீனிவாசராக வன், ஜெயக்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சவுரி ராமன், வாமனன், மோகன் காந்தி, பார் கவுன்சில் உறுப் பினர் அசோக், வி.சி.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அருள்ஜோசப், திராவிடர் கழக நிர்வாகி கணேசன், வழக்கறிஞர்கள் முருகன், கனகவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரஞ்சன் கோகோய் எம்.பி. நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.