tamilnadu

img

ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்போருக்கு சங்கரய்யா பயிற்சி மையத்தில் மாதிரி தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்போருக்கு சங்கரய்யா பயிற்சி மையத்தில் மாதிரி தேர்வு

திருப்பூர், அக்.5- தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், சங்கரய்யா போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையமும் இணைந்து நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி) எழு தும் தேர்வர்களுக்கான மாதிரித் தேர்வு  ஞாயிறன்று நடைபெற்றது. நியமனம் கோரும் ஆசிரியர்களுக் கும், ஆர்டிஇ சட்டம் - 2009 அமல்படுத்தப் படுவதற்கு முன்பு நியமிக்கப்பட்டு 5  ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெறு வது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகள் மட் டுமே பணிக்காலம் உள்ளவர்கள் அல் லது அதற்கும் குறைவாக இருப்பவர் கள் இந்த தேர்வில் தகுதி பெற வேண் டிய அவசியமின்றி ஆசிரியர்களாகத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது. இருப் பினும், அத்தகைய ஆசிரியர்கள் பதவி  உயர்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய  ஆசிரியர்கள், “பணியை விட்டு வெளி யேற வேண்டும் அல்லது கட்டாய ஓய்வு  பெற வேண்டும், என்றும் உச்ச நீதிமன் றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அடுத்து, 2025 நவம்பர் 15 ஆம் தேதி, தகுதி  தேர்வு எழுத வேண்டும் என்று தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறி விக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அ. புதூர், விடுதலைப் போராட்ட வீரர்  என்.சங்கரய்யா போட்டித் தேர்வு இல வச பயிற்சி மையமும் இணைந்து, டி.இ.டி தேர்வர்களுக்கு ஞாயிறன்று மாதிரித் தேர்வினை நடத்தின. பெரி யார் காலனி அறிவுத் திருக்கோயில் மன வளக் கலை மன்றத்தில் நடந்த தேர்வில்  ஆசிரியர்கள் கலந்து கொண்டு தேர் வெழுதினர். இத்தேர்வுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள் நவம்பர் முதல் வாரம் வரை, அ.புதூரில் உள்ள சங்க ரய்யா பயிற்சி மையத்தில் இலவசமாக  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொறுப்பாளர் ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கௌரி சங்கர், ஒருங்கிணைப்பாளர் ஷாருக் கான், சங்கரய்யா போட்டித் தேர்வு  இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பா ளர் எஸ்.சேகர், பொறுப்பாளர் ச.நந்த கோபால் மற்றும் ஆசிரியர்கள் கனக ராஜா, பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.