tamilnadu

img

உணவு உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்டுவோம்!

சிஐடியு மாநாட்டில் பெ.சண்முகம் பேச்சு

காஞ்சிபுரம், செப். 21- விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை களுக்குத் தீர்வு காணத் தொழிலாளர்க ளும் இணைந்து போராடவேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறினார். இந்தியாவில் உள்ள தொழில் நிறு வனங்களும், தொழிலாளர்களும் மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள். விவசாயத்தைப் பொருத்தவரை விவ சாயிகளுக்குச் சொந்தமான வளமான  நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு, இந்திய முதலாளிகளுக்கு அல்லது பல்வேறு வளர்ச்சித் திட்டங்க ளுக்கு  நாடு முழுவதும் அபகரிக்கப் பட்டு வருகின்றது. இதற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ கத்தில் மிக வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது.

உணவு தற்சார்பு என்ற நிலையில் அண்டை மாநிலங்களையும், நாடு களை நாடும் அவல நிலையில் தமிழ கம் இருக்கின்றது. உணவு தற்சார்பு பாதிக்கப்படும் என்பது ஏதோ அது  விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச் சனை, விவசாயத் தொழிலாளி சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதாகப் பார்க்கக் கூடாது. அது ஒட்டு மொத்த மனிதக் குலத்திற்கான பிரச்சனை என்ற முறையில் இத்தகைய பிரச்ச னையில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து  அமைப்புகளும் தலையிட்டு ஆதர வாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், சிஐடியு சங்க மும் கிராமப்புறங்களில் சேர்ந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டி ருக்கின்றது. விவசாயிகள் சங்கமும், சிஐடியும் இணைந்து சமூக மாற்றத்திற்  கான போராட்டத்தை நடத்த வேண்டும். 

தமிழகத்தில் தீண்டாமைக் கொடு மையும், சாதிய பாகுபாடு என்பதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அது கிராமப்புறத்தில் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில், தொழிற்  கூடங்களில் பாகுபாடு என்பது  கொடிகட்டிப் பறந்து கொண்டி ருக்கின்றது. தொழிற்கூடங்களில் பாகு பாடுகள் இருக்கும் இடத்தில் தலை யிட்டு சிஐடியு முத்திரை பதிக்க வேண்டும்.  விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், தொழிலாளிகள் இணைந்து செயல்பட்டால்தான் மத்திய, மாநில அரசுகளின் கடுமை யான தாக்குதலிலிருந்து சிறு குறுந்  தொழில்களையும், தொழிலாளர் களையும் பாதுகாக்க முடியும். கூட்டுப்  போராட்டத்தின் மூலம்தான் விவ சாயத்தை, விவசாயத் தொழிலாளர் களைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு பெ.சண்முகம் பேசி னார்.