சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் மறைந்த தோழருமான கே.ஆர்.சுந்தரத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏகலைவன், காட்பாடி தாலுகா செயலாளர் கே.ஜெ. ஸ்ரீனிவாசன், காந்தி நகர் கிளை தோழர்கள் கோவர்த்தனன், நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் கே.ஆர். சுந்தரத்தின் திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.