tamilnadu

img

பள்ளி சேருவோம்! அரசுப் பள்ளி சேருவோம்!!

பள்ளி சேருவோம் - அரசுப்
பள்ளி சேருவோம்
அற்புதமாய் படித்திடத்தான்
நாமும் சேருவோம்
அழகழகாய் பேசிடத்தான்
நாமும் சேருவோம்
பள்ளி சேருவோம் - வாரீர்
அரசுப் பள்ளி சேருவோம் 
                                                                                          (பள்ளி)

விலையில்லாப் பாடநூல்கள்
பெற்றிடுவோமே - நாங்கள்
கற்றிடுவோமே
வண்ண வண்ண சீருடையும்
பெற்றிடுவோமே - நாங்கள்
அணிந்திடுவோமே - அதனால்
பள்ளி சேருவோம் - வாரீர்
அரசுப் பள்ளி சேருவோம்
                                                                                                   (பள்ளி)

கட்டணமே இல்லாத
கல்வி வேண்டுமா - உனக்கு
கல்வி வேண்டுமா?
கல்வி உதவித்தொகை
பெற்று நீயும் படிக்க வேண்டுமா? - நீயும்
படிக்க வேண்டுமா? - ஆதலால்
பள்ளி சேருவோம் - வாரீர்
அரசுப் பள்ளி சேருவோம்
                                                                                                  (பள்ளி)

அப்துல்கலாம் படித்தாரே
அரசுப்பள்ளியில் - நம்ம
அரசுப் பள்ளியில்
அவர்போல ஆகிடத்தான்
பள்ளி சேருவோம் - அரசுப்
பள்ளி சேருவோம் - அதனால்
பள்ளி சேருவோம் - வாரீர்
அரசுப் பள்ளி சேருவோம்
                                                                                                (பள்ளி)

அறிஞர் பலர் படித்ததெல்லாம்
அரசுப் பள்ளியில் - ஆமாம்
அரசுப் பள்ளியில்
கவிஞர் பலர் ஆனதெல்லாம்
அரசுப் பள்ளியில் - நம்ம
அரசுப் பள்ளியில் - எனவே
பள்ளி சேருவோம் - வாரீர்
அரசுப் பள்ளி சேருவோம்
                                                                                                        (பள்ளி)

ஏழைகளின் விருட்சமாக
நம்ம பள்ளியே - அதுதான்
அரசுப்பள்ளியே
காத்திடுவோம், போற்றிடுவோம்
நம்மபள்ளியை - ஆமாம்
அரசுப்பள்ளியை - அதனால்
பள்ளி சேருவோம் - அரசுப்
பள்ளி சேருவோம்
                                                                                     (பள்ளி)