tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- நாட்டின் 130 கோடி மக்களின் அன்பு எனக்கு இருக்கிறது.

ச.சா - ஒவ்வொரு நாளும், முந்தைய நாள் சொன்ன பொய்ய மிஞ்சனும்னு முடிவெடுத்துருக்காரோ..?


தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு :- இப்போது மறுவாக்குப்பதிவு நடத்துவதுதான் முக்கியமான பணி.

ச.சா - இதுவரைக்கும் இவ்வளவு குளறுபடி நடந்ததில்லையே..??


ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் :- தனது பதவியில் இறுதிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டில் ராஜீவ் காந்தி சிக்கினார்.

ச.சா - ஆளுநரா இருந்து பாஜகவோட தேர்தல் பிரச்சாரத்த எதுக்காக பண்றீங்க..?


மத்திய அமைச்சர் நிதின் கட்காரி :- சீக்கியர் களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை.

ச.சா - உண்மைதான்.. குஜராத் கலவரத்துல ஈடுபட்டவங்கள நீங்க தப்பிக்க வெக்குறீங்களே..?