உன் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் சூர்யாவுக்கு சத்தியராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு இன்று 44 வது பிறந்தநாள். பல்வேறு திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்தியராஜ் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில கஷ்டங்கள் அதற்குள் சில இழப்புகள் இருக்கிறது. பல எதிர்ப்புகளை பல சங்கடங்களை சந்திக்க வேண்டியநிலை வரும். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதனால் நீ சமூக நீதிக்காவும், கல்விக்காகவும் குரல் கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் நுனிப்புல்லை மேய்ந்தது போல மேலோட்டமாக எதுவும் சொல்லாமல், ஆழமாக இறங்கி ஆராய்ந்து சொல்ல வேண்டிய கருத்துகளை பதிவு செய்திருக்கிறாய். இந்த பிறந்த நாளுக்கு உன்னை விட வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன் என்ற தெரிவித்துள்ளார்.