நீலகிரி, ஏப்.16- குன்னூர் சிம்ஸ் பூங்கா வில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணி கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன் னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டு தோறும் மே இறுதி வாரத்தில் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீச னுக்காக ஜனவரியில் 2.60 லட்சம் நாற்றுகள் நடவு பணி கள் தொடங்கி பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது.
இதனையடுத்து கொரோனா அச்சம் காரண மாக ஊரடங்கு உத்தரவால் பூங்கா மூடப்பட்டது. இருப்பி னும் சமூக விலகல் கடை பிடிக்கப்பட்டு பரமாரிப்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. தற்போது பூங்காவில் உள்ள டான்சிங் டால், பேன்சி உள்ளிட்ட மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. ஊர டங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பூக் களை காண்பதற்கு சுற்று லாப் பயணிகள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்ப டுகிறது.