உலக அளவில் கொரோனா நோய் தொற்றால் 21,062,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6,174 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா காரணமாக 21,062,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 264,935 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 752,580 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 13,894,466 பேர் குணமடைந்துள்ளனர். 6,415,425 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். உலகம் முழுவதும் சிகிச்சை உள்ள 64,692 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,142 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2,459,613 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 6,60,348 பேர் மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருக்கிறார்கள். 54, 776 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,750,636 பேர் இந்தியா முழுவதும் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,006 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பலியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் மொத்தமாக 48, 144 பேர் பலியாகி உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.