tamilnadu

img

தில்லி ராஜ்கட் முதல் ராஜ்கட் வரை... மாபெரும் மனிதச் சங்கிலியாய்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பிரம்மாண்டமான போராட்டப் பேரலையின் உணர்ச்சிமிகு கட்டமாக, ஜனவரி 30 வியாழனன்று மகாத்மா காந்தி தியாக தினத்தன்று தில்லியில் ராஜ்கட்டில் துவங்கி ராஜ்கட் வரை - சாந்திவனம், ஹனுமன் மந்திர், லால்கிலா, ஜும்மா மசூதி, கோல்ச்சா, தில்லி கேட் வழியாக - மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாலை 3.30 மணி முதல் 5.17 வரை நீடித்தது இந்தப் போராட்டம். ஜனவரி 30 மாலை 5.17 மணி என்பது காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரமாகும்.மிகச்சரியாக அந்த நேரத்தில் மனிதச் சங்கிலியில் கரங்கோர்த்திருந்த ஒட்டுமொத்த மக்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, ஒரே நேரத்தில் தேசிய கீதம் இசைத்து, உணர்ச்சிமிகு போராட்டமாக இதை மாற்றினர்.  அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உள்பட 109 மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் உரிமை மக்கள் அதிகாரப் பேரியக்கம்) இந்த மாபெரும் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் சிபிஎம் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், நிலோத்பல் பாசு உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

;