tamilnadu

img

சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துக!

டீக்கடை  சங்கத்  தலைவர்   டி.ஆனந்தன்  கோரிக்கை

சென்னை, செப். 6 - வணிக பயன்பாட்டிற் கான சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. ஆனந்தன் வலியுறுத்த உள்ளார். இது தொடர்பாக சென்  னையில் செய்தியாளர்களி டம் அவர் கூறியாவது: சமூக விரோதிகள், காவல்துறை மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளின் தொந்தரவால் டீக்கடை உரி மையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து 1981ம் ஆண்டு சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கம் நடத்திய போராட்டங்ளால் சமூக விரோதிகள், அதிகாரிகளின் அத்துமீறல்கள் குறைந்தது.  டீக்கடை வைக்க காவல்  துறை அனுமதி தேவை யில்லை என்று சட்டமன்றத் தில் அரசு திருத்தம் கொண்டு  வந்தது. புயல், வெள்ளம், பூகம்  பம், யுத்தம் போன்ற காலங்  களில் சங்கம் சமூக பொறுப்  போடு செயலாற்றி அதற்கான  உதவிகளையும் சங்கம் செய்து வந்துள்ளது. தமிழ கம், கேரளாவில் புயல், மழை வெள்ள  ஏற்படும் போது  பெருமளவு நிவாரண நிதி யும் வழங்கியுள்ளது. டீக்கடை உரிமையா ளர்கள் மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்க ளுக்கும் உரிய உதவிகளை செய்கிறோம். மனநல காப்  பகங்கள், முதியோர் இல்லங்களும் தேவையான உதவிகளை செய்கிறோம். இந்நிலையில் சங்கத்தின்  38வது ஆண்டு விழா ஞாயி றன்று (செப்.8) தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில்  நடைபெறுகிறது. இவ்விழா வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா உள்ளிட்டு பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.  10, 12ம் வகுப்பு பொதுத்  தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற டீக்கடை உரிமையா ளர்கள் மற்றும் தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்க உள்ளோம். பால் உள்ளிட்ட பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்தபோதும் சமூக பொறுப்போடு டீக்கடை உரி மையாளர்கள் விலைகளை உயர்த்தாமல் உள்ளனர். அதேபோன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைப்பதோடு, அடிக்கடி விலை உயர்த்துவதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;