tamilnadu

img

சுங்கக் கட்டணக் கொள்ளையால் மக்கள் பாதிப்பு: அ.சவுந்தரராசன்

திருவண்ணாமலை, பிப். 8- தமிழகத்தில் சுங்கக் கட்டண  கொள்ளையால் பொது மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக திரு வண்ணாமலையில் அ.சவுந்தர ராசன் பேசினார்.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 7 ஆவது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில்  நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பெ. முத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழுத் தலைவர் மு.பாஸ்கரன் வர வேற்றார். அரசு ஊழியர்  சங்க பொதுச் செயலாளர் ஆ. செல்வம் துவக்கவுரையாற்றி னார். ஆ.அம்சராஜ், இரா.தமிழ்  ஆகியோர் அறிக்கை வாசித்த னர். சகோதர சங்க நிர்வாகிகள், ஜே.ராஜா, ஆர்ஜோதிசங்கர், கே.அண்ணதுரை, ஏ. அருண்பாட்சா, ஏ.அந்தோணி ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த பேரவையில் உரை யாற்றிய சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன்,“ சென் னையில், கார் உற்பத்தி தொழிற்  சாலை மற்றும் உதிரி பாகங்கள்  உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளில் 6 லட்சம் பேர்  பணிபுரிகின்றனர். இவர்களை  பாதுகாக்கும் தொழிற்சங்கங் களை இல்லாமல் செய்வது முத லாளிகளின் நோக்கமாக உள் ளது” என்றார்.

மத்திய அரசில் 32 லட்சம் ஊழி யர்கள் உள்ளனர். இதில் 6 லட்சம்  காலிப் பணியிடங்கள் உள்ளது.  மாநில அரசிலும் காலிப்பணி யிடங்கள் உள்ளது. இதை நிரப்பு வதற்கு அரசுகள் தயாராக  இல்லை. சாலைபணியாளர் களின்  வாரிசுகளுக்கு வேலை  வழங்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளோம்,  ஆனால், காலிப்பணியிடங் களை நிரப்புவது என்ற செயல்  பணத்திற்காக மட்டுமே நடை பெறுகிறது. போக்குவரத்து கழ கத்தில் பணி நியமன ஊழல், டிஎன்பிஎஸ்சி, விஏஓ, தேர்வு களில் முறைகேடு நடைபெற்றுள்  ளது என்றும் அவர் கூறினார். வருடத்திற்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. லாரி உரி மையாளர்கள் சங்கம் சார்பாக,  சுங்கக் கட்டணமாக வசூ லிக்கப்படும் 65 ஆயிரம் கோடி ரூபாயை, நாங்களே கொடுத்து விடுகிறோம். அனைத்து சுங்கச்  சாவடிகளையும் எடுத்துவிடுங் கள், மற்ற எல்லா வாகனங்களும் இலவசமாக செல்லட்டும் என்று சொல்கிறார்கள். ஏன்  என்று அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, அவ்வளவு கொடுமை, அவ்வளவு கொள்ளை, எனவே நாங்களே  அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று சொல்கி றார்கள். ஒரு லாரி உரிமையா ளர்கள் சங்கத்தால் அந்த பணத்தை கொடுக்க முடியும் மற்றவர்களை இலவசமாக அனுப்ப முடியும் என்பதை கூட,  ஆட்சியாளர்களால் செய்ய முடி யாத வெட்கம் கெட்ட ஆட்சியே,  தமிழகத்தில் நடைபெற்று வரு கிறது. கட்டண கொள்ளை, தனி யார் பள்ளிகளின் கொள்ளை, தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைகளால், மக்கள் பணம்  விரயமாகிறது. சமீபத்தில் வெளி யான நிர்மலா சீதாராமன் பட்ஜெட், மக்களின் துயரத்தை, மேலும் நீடிக்கவே செய்யும் எனவும் சவுந்தரராசன் தெரி வித்தார். அரசு ஊழியர் சங்க மாநில  தலைவர் மு.அன்பரசு நிறை வுரையாற்றினார். எம்.மகா தேவன் நன்றி கூறினார்.