tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

10 காவலர்கள் மொத்தமாக ஆஜர்

தூத்துக்குடி, ஜுலை 6-    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் திங்க ளன்று சாத்தான்குளம் மருத்து வமனையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி அலுவலகத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 10 போலீசாரும் ஒட்டுமொத்தமாக ஆஜராகினர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் ஆஜ ரானார். அவர்களிடம் சிபிசிஐடி யினர் விசாரணை நடத்தினர்.

5 பேரை காவலில் எடுக்க முடிவு

முன்னதாக ஞாயிறன்று சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான அனைவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை சித்தரவதை செய்து கொன்ற வழக்கில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பேரூரணி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த நிலை யில், 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட னர். மேலும் இந்த இரட்டை கொலையில் கைதான காவல் துறையினர் 5 பேரை விசார ணைக்கு எடுக்கஉள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி வந்த சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்ளிடம் கூறுகை யில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசா ரணை தீவிரமாக நடந்து வரு கிறது.  அடுத்த கட்ட நடவடிக்கை யாக் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணி யாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த 5  பேரிடம் விசாரண நடத்த உள்ளோம். மேலும் இவ்வழ க்கில் கைதான 5பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றம் அனுமதி வழங்கிய உடன் விசாரணை நடத்தப்படும் என்றார்.
 

;