tamilnadu

img

மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி.... கொத்தங்குடி - கொள்ளிடம் மணல் குவாரி திறப்பு விழா

கும்பகோணம்:
மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாகொத்தங்குடி-கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிக்குமட்டும் மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி கடந்த6 மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள், கொத்தங்குடி-கொள்ளிடம் ஆற்றில் அனுமதி பெற்ற இடத்தில்மணல் குவாரி அமைப்பதற்கு ஒப்புக் கொண்டனர். கடந்த ஆறு மாதமாக குவாரியை திறப்பதற்காகசிஐடியு தொடர் நடவடிக்கை எடுத்ததன் மூலம் சுமார் 650 அனுமதி பெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள், 67 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் எடுப்பதற்குமணல் குவாரி திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. மணல் குவாரி திறப்பு விழாவில் சிஐடியு தஞ்சைமாவட்ட செயலாளர் சி.ஜெயபால், விதொச மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், சிஐடியு மாவட்டப்பொருளாளர் ம.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, விதொச ஒன்றியத் தலைவர் நாகமுத்து, விச ஒன்றிய தலைவர் குணசேகரன், மாட்டுவண்டி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.சிஐடியு மாட்டுவண்டி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால், பட்டுக்கோட்டை, பாபநாசம், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெற்றமணல் குவாரி திறக்கப்பட்டிருந்த நிலையில், கும்பகோணம் பகுதி கொத்தங்குடி நான்காவது குவாரியாக தற்போது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.