tamilnadu

img

குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு

சென்னை,ஏப்.29- தமிழ்நாடு, பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு  ஷேர்சாட்டுடன் இணைந்து குடும்ப வன்முறைகளுக்கு எதிராக தமிழக மக்க ளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இதற்காக இந்த சிறப்பு பிரிவு @TNPoliceCWC என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தை ஷேர்சாட்டில் தொடங்கி யுள்ளது.  ஷேர்சாட் பயனர்கள், இப்பிரிவு  சம்பந்தப்பட்ட குறைகளை தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்யும் பட்சத்தில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து குறை களும் காவல்துறை அதிகாரிகளால் சரியான நேரத்தில் தீர்க்கப்படும்.  தமிழக காவல்துறை, தமிழக குடும்பங்களில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு ஷேர்சாட்டில் சுவாரஸ்யமான மற்றும் புதுமையான பரிசு போட்டி ஒன்றையும் நடத்துகிறது. 

இந்த பரிசு போட்டியில் பங்குபெற பெண்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல்  தங்கள் வீட்டிலேயே கோலம் வரைந்தும்,  ஆண்கள் பெண்களுக்கு உதவும் வகை யில் சமைத்தோ அல்லது வீட்டுவேலை செய்தோ ஷேர்சாட் கேமராவில் பதிவிட வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புபிரிவு கூடுதல் டிஜிபி ரவி கூறியுள்ளார்.

;