tamilnadu

img

அ‌கில இ‌ந்‌திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு

விசாகப்பட்டினத்தில் துவங்கியது

விசாகப்பட்டினம், ஜன. 27- அ‌கில இ‌ந்‌திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 25 வது மாநாடு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. 1500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் பங்கேற்று உள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. ரமேஷ் “தொழிற்சங்க இயக்கம், ஒற்றுமை - தொழில் பாதுகாப்பு - உரிமைகள் ஆகியன மீதான பெரும் சவால்களை எதிர் நோக்கி  உள்ள நேரம் இது. வலுவான உறுதியான எதிர் வினைகள் தேவைப்படுகிற நேரமும் இது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு இதற்கான முடிவுகளை எடுக்கும்” என்று கொடியேற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். மாநாட்டு கொடியை சங்கத்தின் அகில இந்திய தலைவர் அமானுல்லாகான், இணைச் செயலாளர் எம். கிரிஜா ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர்.  பிரதிநிதிகள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக் கான பெண்கள் பிரதிநிதிகளாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர். 

கேரளப் பிரதிநிதிகள் மனித சங்கிலி

ஜனவரி 26 அன்றே மாநாட்டிற்கு வருகை தந்திருந்த கேரளப் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் அன்றைய தினம் கேரளாவில் சி.ஏ.ஏ வுக்கு எதிராக நடந்தேறிய மனித சங்கிலிக்கு ஆதரவாக விசாகப்பட்டினம் கடற்கரையில் கரங்கள் கோர்த்து மனித சங்கிலியாய் அணி வகுத்தனர்.
 

;