கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றியதாகவும், தெருக்களில் நடந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஒருவர் இருசக்கர வாகனத்தில் என்ன தேவைக்காக வந்தார்? எங்கே செல்கிறார்? என்றெல்லாம் காவல்துறை அறிவதாகத் தெரியவில்லை. இரு சக்கர வாகனத்தில் ஒரு தேவையின்றி வந்தாலும் அவர்களை அழைத்து கொரோனா குறித்து விளக்கி அனுப்பி வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இளைஞர்களாக இருந்தால் அவர்களது பெற்றோர்களை செல்போனில் அழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைக்க வேண்டும். இதுதான் காவல்துறை பணியாக இருக்க முடியும். இருக்க வேண்டும்.
அதை விடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 234 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் நகரில் 14 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் 42 பேர் மீது 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. நிலக்கோட்டையில் 39 பேர்கள் மீது 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பழனியில் 96 பேர் மீது 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் 26 பேர்கள் மீது 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொடைக்கானலில் 5 பேர் மீது 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. வேடசந்தூரில் 12 பேர் மீது 12 வழக்குகள் பதியப்பட்டுள்ளது