பிரேசிலில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இளவேனிலின் உறவினர்கள் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளவேனில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதால், அதற்காக முயற்சிப்பேன் என்றும் கூறினார்.