tamilnadu

img

பாஜக தலைவரின் உச்சகட்ட வெறி இஸ்லாமியர்களை அழிக்க மோடிக்கு ஓட்டு போடவாம்...

லக்னோ, ஏப். 20 - இஸ்லாமியர்களை அழிக்க பாஜக-வுக்கு வாக்களியுங்கள் என்று ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா என்ற பாஜக தலைவர் பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக பேசியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போதுதான், இஸ்லாமியர்களின் மன வலிமையை உடைக்க பிரதமர் மோடி பல முயற்சிகள் செய்துள்ளதாகவும், அந்த வகையில், இஸ்லாமியர்களின் இனப்பெருக்கத்தை அழிக்க வேண்டுமானால், அனைவரும் மோடிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவஸ்தவா பேசியுள்ளார்.நாட்டுப் பிரிவினைக்கு பிறகும் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், இப்படியே போனால் விரைவில் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்றும் கூறியிருக்கும் ஸ்ரீவஸ்தவா, “பாஜக வெற்றிபெற்றால் தேர்தலுக்கு பிறகு முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுவார்கள்” என்றும் மதவெறியைத் தூண்டி விட்டுள்ளார்.

;