பீகார் சட்டமன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் வெற்றி என்பது சட்டமன்றத்தில் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயன்படுத்தப்படும். மிக முக்கிய பிரச்சனைகளான வேலைவாய்ப்பு/ சமூக மற்றும் பொருளாதார அசமத்துவங்கள் ஆகியவை குறித்து இடதுசாரி உறுப்பினர்கள் வலுவாக குரல் எழுப்புவார்கள்.
**********************
பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஒவ்வொரு உரையும் மத அடிப்படையிலான பிளவுகளை கூர்மைப்படுத்துவதையே இலக்காகக் கொண்டிருந்தது. பெருந்தொற்று காலத்தில் மக்களின் துன்பங்கள் குறித்தோ அல்லது ஊரடங்கின் மோசமான விளைவுகள் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. இப்பொழுது பெருந்தொற்றை எதிர்கொண்டதில் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் அங்கீகரித்தது உள்ளதாக மோடி மார்தட்டிக் கொள்கிறார். ஏமாற்று பிரச்சாரமும் வெற்று வாய்ப்பந்தலும் எடுபடாது.
**********************
பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் உரைகளில் எங்கேயும் ஒருமுறைகூட பெண்களுக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகள்/ பாலியல் வல்லுறவுகள்/ படுகொலைகள் குறித்து எதுவுமே பேசவில்லை. ஆனால் இப்பொழுது பீகார்
பெண்கள் தனது கூட்டணியை ஆதரித்ததாக பெருமைப்படுகிறார். அப்பட்டமான பொய்கள் ஏமாற்றுவதை புதிய ஆழத்துக்கு கொண்டு செல்கின்றன! வெட்கக்கேடு!
**********************
பீகார் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்கள் மீது ஏவப்படுகின்ற மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கொடூரமான கனத்த மௌனம் காத்தார். தலித் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்முறைகள்/கொடூர கொலைகள்/ ஹத்ராசில் தலித் இளம் பெண்ணின் உடலை எவருக்கும் தெரியாமல் எரித்தது போன்ற எதுவுமே அவரது உரைகளில் இடம்பெறவில்லை.ஆனால் இப்பொழுது பீகாரில் தலித் மக்கள் தனது கொள்கைகளை அங்கீகரித்து விட்டார்கள் என கூறுகிறார். இதைவிட ஏதாவது மோசடி இருக்க இயலுமா?
**********************
வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதார மந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது என ரிசர்வ் வங்கி தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நாம் கூறி வருகிறோம். மோடி அரசாங்கம் மறுத்து வந்தது. இப்பொழுது அதிகாரப்பூர்வமாகவே ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார தொடர் வீழ்ச்சியின் காரணமாக வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வறுமை/பட்டினி/பல இன்னல்கள் இழப்புகளுக்கு ஆளாகின்றனர். மோடியின் கொள்கைகள் காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பொருளாதாரம் அழிந்தது.
**********************
தேசிய வளங்களை கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள்! பிரதமரின் தனிப்பட்ட கணக்கில் நிதியை குவிப்பதை நிறுத்துங்கள்! பொது முதலீட்டை மிக கணிசமாக அதிகப்படுத்துங்கள். உள் கட்டுமான திட்டங்களை செயல்படுத்துங்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம்தான் மக்கள் கைகளுக்கு பணம் வரும். அவர்கள் பொருட்களை வாங்குவது அதிகரிக்கும். அதன் மூலமே பொருளாதார மீட்சி சாத்தியம் ஆகும்.
++++++++++++++++++
சமூக வலைதளங்களில் படிக்க...
முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/
டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury