tamilnadu

img

உண்டியலை கைப்பற்றிய கோயில் அர்ச்சகர்கள்..!

உத்தர்காசி:
உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள கோயில் ஒன்றில், சம்பளம் கிடைக்காத அர்ச்சகர்கள், கோயில் உண்டியலைக் கைப்பற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தர்கண்ட்டில் உள்ள உத்தரகாசி என்ற மிகவும் பிரபலமான யமுனோத்ரி கோயில் உள்ளது. இங்குள்ளஅர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இப்பிரச்சனையை உத்தர்கண்ட் பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த அர்ச்சகர்கள், கோயில் உண்டியலைத் துணிபோட்டு மூடி, தங்களின் கட்டுப்பாட்டில் அபகரித்துக் கொண்டுள்ளனர்.
“எங்களுக்கு ஊதியம் கிடைக்க வேண்டும் இல்லையென்றால் உண்டியல் வசூலிலிருந்து ஒரு சதவிதத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றுஅவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உண்டியலை துணி போட்டு கைப்பற்றி வைத்துள்ள தகவல் அறிந்ததும் பார்கோட் மாவட்டசப் - டிவிசன் மாஜிஸ்திரேட் அனுராக்ஆர்யா, கோவிலுக்கு உயர்பாதுகாப்பு படையினை அனுப்பியுள்ளார்.
“தகவல் கிடைத்ததும் கோயிலுக்கு தக்க பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

;