tamilnadu

img

குற்றவாளிகள் 4 பேருக்கு சாகும் வரை சிறைத்தண்டனைக்கு மாதர் சங்கம் வரவேற்பு

கும்பகோணத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் 

சென்னை,ஜன.17-  தில்லியைச் சேர்ந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை அளிக்கப் பட்டுள்ள தீர்ப்புக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  2018 டிசம்பர் 1 ஆம் தேதி தில்லியில் இருந்து கும்பகோணத்திற்கு வங்கி ஒன்றில் பணிக்குச் சேர்வதற்காக வந்த இளம்பெண்ணை அப்பகுதியைச் சார்ந்த  4   இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சம்பவத்தை வெளியில் சொன்னால் அந்த வீடியோ வை சமூக வலைதளத்தில் பரப்பி விடு வோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டுச் சென்றுள்ளனர்.இச்சம்பவம்  கும்பகோ ணம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இவ்வழக்கு 14 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்கப்பட்டு  தீர்ப்பு அறி விக்கப்பட்டுள்ளது.  குற்றவாளிகள் நால்வ ரும் சாகும் வரை சிறை தண்டனை அனு பவிக்க வேண்டும் என்றும்  அவர்கள் சிறையில்  இறந்த பின்னரே அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும்  அத்தொகை  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தஞ்சை மகளிர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள் ளது. மேலும் அப்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச்சென்று   இருட்டான பகுதியில் விட்டுச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது . இதுபோன்ற கொடூர குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை என்பது வரவேற்கத்தக்கது. மேலும் இத்தீர்ப்பில் குற்றவாளிக ளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்து ஏற்பு டையதல்ல. பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் கொடுக்கும் தொகையை ஒரு பெண் பெற்றுக்கொள் வது ஏற்புடையதல்ல.

எனவே குற்றவாளியிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையை அப்பெண்ணுக்கு வழங்க தேவை யில்லை எனவும்  இந்த இரண்டு லட்சம் ரூபாய் என்ற இழப்பீட்டு தொகை போது மானதல்ல எனவும் ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. எனவே அப்பெண்ணுக்கு  25 லட்சம்  ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டு மென்றும் ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இக்கொடூரச் சம்பவத்தைக் கண் டித்தும், வழக்கை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட வும்  வங்கி ஊழியர் சங்கமும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டங்களை கும்ப கோணத்தில் நடத்தியுள்ளது.அப்பகுதி மக்களும் பெருந்திரளாக இயக்கத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தால் விரைவான விசாரணை
 

தஞ்சை மாவட்ட அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், வங்கி ஊழியர் சங்கமும்,இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும்  இணைந்து நடத்திய மிகப்பிரம் மாண்டமான போராட்டமே இந்த வழக்கை மேலும் விரைவாக நடத்தி முடிப்பதற்கு வழிவகுத்தது. போராட்டத்தை முன்னெ டுத்த அனைத்து அமைப்புகளுக்கும் ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  இந்த வழக்கை 14 மாத காலங்களில் முடித்த காவல்துறையின்  செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. பெருந்திரளாக போராட்டத்தில் கலந்துகொண்ட அப்பகுதி மக்களுக்கும் ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு  பாராட்டுக்களை யும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

;