tamilnadu

img

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு... இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி....

மதுரை:
சாத்தான்குளம் காவல்துறையினரால் சிலர் தாக்கப் பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். சிறையில் கைதியாக உள்ள ராஜாசிங், தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த  மகேந்திரன், தட்டார்மடம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு இறந்து போன  செல்வன் ஆகிய 3 பேரின் வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்காணித்து வருகின்றது.இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி  இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுமுன்பு சனிக்கிழமையன்று சமர்ப்பித்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சாத்தான்குளம் காவல்துறையினரால் வணிகர்களான தந்தை-மகன் கொலை வழக்கு நவம்பர்  11ம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.