ஜெனீவா, ஜூலை 4- கொரோனா வைரஸ் சீனா நாட்டின் வூகானில் உள்ள வைரா லஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி. பரபரப்பு செய்தி வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்பும், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பி யோவும் கூறிவந்தனர். ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் ஆத்திர மடைந்த அதிபர் டிரம்ப், உலக சுகா தார நிறுவனத்தை கடுமையாகச் சாடி, அதற்கான நிதியை தர மறுத் தார். அமெரிக்க படை வீரர்கள் தான் கொரோனா வைரசை சீனா வில் கொண்டு வந்து விட்டதாக சீனா குற்றம்சாட்டுகிறது. இந் நிலையில் இந்த வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந் துள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு அடுத்த வாரம் சீனா வுக்கு செல்கிறது.