tamilnadu

img

வியத்தகு குணசீலர் தோழர் வி.நடராஜன்

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா விற்கு உட்பட்ட பெரிய மோளபாளையம் இடதுசாரி சிந்தனை கொண்ட பல குடும் பங்கள் வசித்துவரும் ஒரு கிராமம். இங்கு 1956 ஆம் ஆண்டு ஒரு நெசவுத்தொழிலாளியின் குடும்பத்தில் வி.நட ராஜன் பிறந்தார். 1967-70 காலகட்டத் தில் மிகக்கடுமையான பஞ்சம் நிலவியகாரணத்தால் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிட்டார். குடும்ப வறுமை காரணமாக படிக்கமுடி யாத அவர், ஊரிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானிக்கு தினமும் மிதிவண்டியில் சென்று பெட்ஷீட்கடைகளில் வேலைபார்க்கலா னார்.  1970-71 காலகட்டத்தில் இளம் வய தில் வி.நடராஜன் அவரது சகநண்பர்க ளுடன் சேர்ந்து ஊரின் மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களின் வழிகாட்டுதலில் கட்சி பிரசுரங்களை வாசிப்பது, மக்கள் பிரச் சனைகள் பற்றி விவாதிப்பது என்ற அடிப் படையான அரசியல் அறிவை கற்றுக் கொண்டனர். அப்போது பவானியில் இருந்த சில இடதுசாரி முற்போக்கு சிந் தனைகொண்ட தோழர்களுடன் இணைந்து சுவரெழுத்துகள் எழுதி தொடர் அரசியல் கொள்கை பிரச்சாரப் பணியை மேற்கொண்டார் வி.நடராஜன்.

சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி
அந்த காலத்தில் ஒருங்கிணைந்த வாலிபர் அமைப்பு இல்லை. இடதுசாரி முற்போக்கு சிந்தனை கொண்ட இளை ஞர்கள் ஆங்காங்கே கட்சித் தலைவர்கள் பெயரில் மன்றங்களை துவக்கி சமூக சேவை, கலை பண்பாட்டு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், மக்கள் கோரிக்கை இயக்கங்கள் என நடத்தி வந்தனர். பெரிய மோளபாளையத்தில் வி.நடராஜன் உள்ளிட்ட இளைஞர்களும் இதே பாதை யைப் பின்பற்றினர். முதன் முதலில் கேரளாவில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி (எஸ்ஒய்எப்) உருவானது. தோழர் கே.ரமணி அவர்களின் வழி காட்டுதலில் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்திலும் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி துவக்கப்பட்டது. அதன் ஒரு கிளை பவானியிலும் வி.நடராஜன் உள்ளிட்ட இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டது. 1972 ல் கோவை, ஆர்எஸ் புரம் கேரள சமாஜத்தில் நடந்த எஸ்ஒய்எப் ஒருங் கிணைப்புக்குழு கூட்டத்திலும், பின்னர் திருப்பூரில் நடந்த முதல் மாநாட்டிலும் வி.நடராஜன் உள்ளிட்ட பவானி இளை ஞர்கள் பங்கேற்றனர். அதற்குப்பிறகு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்க வி.நடராஜன் பவானி தாலுகா வின் பல ஊர்களுக்கு பல மைல்கள் மிதி வண்டியில் பயணிக்க ஆரம்பித்தார். பல நாட்கள் இரவில் பல கிராமங்களில் தங்கி உறுப்பினர் சேர்த்து அமைப்பை கட்டி னார். 1980 - ல் வாலிபர் சங்கம் டிஒய்எப்ஐ என உதயமான பிறகு நூற்றுக்கணக் கான இளைஞர்களை திரட்டி பவானி, மைலம்பாடி என பல மைல்கள் சீருடை யுடன், மிதிவண்டிப் பேரணிகளை நடத் தினார். திருப்பூர் முதல் வாலிபர் சங்க  மாநாட்டிற்கும், அதற்கு முன்பு அவசர நிலை காலத்திற்கு பிறகு சேலத்தில் பிர பாதியேட்டர் அருகில் தோழர் ஜோதிர் மாய்பாசு பங்கேற்ற கருத்தரங்கிற்கும் வி.நடராஜன் தலைமையில் இருபத்தைந் துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் 75 மைல்தூரம் மிதிவண்டியிலேயே சென்று  பங்கேற்றனர். ஆப்பக்கூடல் பகுதியில் வாலிபர் மற்றும் தொழிற்சங்க அமைப்பை வலுவாக கட்ட வி.நடராஜன் தொடர்ந்து பணியாற்றினார். அந்தியூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கப்பட்ட போது அதன் முதல் ஒன்றியச்செயலாளர் அவர்தான். இச்சூழலில் பவானியில் ஜார்ஜ் என்ற கேரளத்தோழர் இருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஏடான “தீக்கதிர்” வார ஏடாக வந்த சமயம், அதை தொடர்ந்து அவர் வாங்கி படிப்பதுடன் மற்றவருக்கும் விநியோ கிப்பார். இவ்வாறு வி. நடராஜன் தீக்கதிர் படிப்பது என்பது வழக் கமாகி,பின்னர்  அவரே தீக்கதிர் விநி யோகராகவும் மாறினார். இதைத்தொடர்ந்து பவானியில் ஜம்பை, பெரியமோள பாளையம், தளவாய்ப்பேட்டையை உள்ளடக்கி உதயமான மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் கட்சிக்கிளையின் முதல் செயலாளர் வி.நடராஜன்தான். இதேபோல், பவானி ஜமுக்காள நெசவுத்தொழிலாளர் சங்கத்தை உருவாக்கவும் பாடுபட்டார். பெரியபுலியூரில் செயல்பட்ட “கோயம்புத்தூர் ஆல்ஹகால்” எரிசாராய ஆலை நிர்வாகம் பவானி ஆற்றைக் கடந்து ஆப்பக்கூடல், ஒரிச்சேரிப்புதூர், ஜம்பை, புன்னம் ஆகிய பகுதிகளின் விவ சாய பூமியில் தனது கழிவு நீரை பாய்ச்ச முனைந்தபோது அனைத்துக்கட்சிகள் அடங்கிய போராட்டக்குழுவை உரு வாக்கி அதற்கு எதிரான இயக்கத்தினை வி.நடராஜன் முன்னெடுத்தார். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் இருந்து கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு பிரிந்தபோது முதல் மாவட்டக் குழுவில் வி.நடராஜனும் ஒருவர், ஈரோடு மாவட்டக்குழு பிரிந்தபிறகு சில ஆண்டு கள் கழித்து கட்சியின் மாவட்டக்குழு அலுவலகச் செயலாளராக தோழர் வி.நடராஜன் பொறுப்பேற்றார். இரு பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் அவர் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலக செயலாளராக பணியாற்றி னார். அலுவலக செயலாளராக இருந்த காலத்திலேயே கட்சியின் மாவட்டச் செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர் மற்றும் அலுவலக செயலாளர் பொறுப்புகளை சமகாலத் தில் நிறைவேற்றினார். அலுவலகத்திற்கு வரும் தலைவர்களை, தோழர்களை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்து திருப்பி அனுப்பும் வரையிலான அவ ரது பணியை பாராட்டாதவர்கள் யாரு மில்லை என்றே கூறவேண்டும். அவரது இந்த செயல்பாடு ஈரோடு மாவட்டத்தை யும் தாண்டி பல தலைவர்கள் தோழர்கள் மத்தியில் அவருக்கு மரியாதையை பெற் றுத்தந்தது.   இதன்பின் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட பொறுப் பாளராகவும், பின்னர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட் டத் தலைவர், செயலாளர் ஆகிய  பொறுப்புகளை ஏற்று மாற்றுத்திறனாளி கள் நலனுக்காக மாவட்டம் முழுதும் சென்று அமைப்பை உருவாக்கி இடைக் கமிட்டிகள் அமைத்து செயல்படுத்தி னார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலு வலகம், அரசு மருத்துவமனை என தொடர்ந்து சென்றவாறே இருப்பார். இத னால் மாற்றுத்திறனாளிகள் வி.நட ராஜனை ஒரு தந்தையைப்போலவே பாவித்தனர். அவர்களுக்கு அவரின் உதவி கள் எண்ணிலடங்காதவை. இறுதிமூச்சு வரை மாற்றுத்திறனாளிகளுக்காகவே அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண் டார். இவ்வாறு தனது கட்சிப்பணியை சிறுவயதில் துவங்கி இறுதி மூச்சுவரை என்றுமே ஒரு கட்சி அமைப்பாளராக, ஊழியராகவே மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை தத்துவத்தின்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு நமக் கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் வாழ்ந்த அவர் 2019 பிப்ரவரி ஏழாம் தேதி இயற்கை எய்தினார். அவர் வழிநின்று செங் கொடியை உயர்த்திப்பிடிப்போம். தோழர் வி.நடராஜன் புகழ் ஓங்குக.! -அந்தியூர் ஆர்.முருகேசன்