tamilnadu

வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு,டிச.31- வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ள மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாது காப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்ப தாவது:- ஈரோடு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட் டமாக  ஈரோடு, மொடக்குறிச்சி,கொடு முடி, கோபிசெட்டிபாளையம், நம்பி யூர், தூக்கநாயக்கன்பாளையம்  மற்றும் தாளவாடி ஆகிய 7ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 657வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் 7 மையங்களில் வைக்கப் பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களான வாசவி கலை மற்றும் அறிவியல் கல் லூரி, சித்தோடு, அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி, ஸ்ரீசங் கர வித்யாசலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கொடுமுடி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபி செட்டிபாளையம்,அரசு உயர் நிலைப்பள்ளி, பங்களாபுதூர், அரசு உயர்நிலைப்பள்ளி, குருமந்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி, தாளவாடி  ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட் டுள்ள வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து காவல் துறை அலுவலர்களும் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்கள் கண் காணிப்பு காமிரா (சிசிடிவி) மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  நாள்தோறும் கட்டுப்பாட்டு அறை யில் கண்காணிப்பு பதிவேடு பராமரிக் கப்பட்டு வருகிறது.மேலும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை பாதுகாப்பிற்காக தடையில்லா மின்சாரம் வழங்கிட ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள் ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;