tamilnadu

img

பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோபி, ஜன.23-  கோபிசெட்டிபாளையம் ரோட்டரி சங் கத்தின் சார்பில் வியாழனன்று நடை பெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு  மாரத்தான் போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் முதல் முறையாக மகளிருக்கான மாரத்தான் போட்டி வியாழனன்று நடத்தப்பட்டது. இம்மாரத்தான் போட்டியானது பெண்கள் மேம்பாடு, குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு மற்றும் போலியோ இல்லாத உலகம் என்ற  முழக்கங்களை முன்வைத்து நடைபெற்றது. இதில் 10 வயது முதல் 25 வயது வரை யான மகளிருக்கு ஒருபிரிவும், 25 வயது மேற்பட்ட பெண்களுக்கான ஒரு பிரிவும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் என நிர்ணயக்கப்பட்ட மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி, குடும்ப பெண்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப்பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டி கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தொடங்கி நல்லக வுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிவுற் றது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 25 இடங்களை பிடித்த மகளிருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரு பிரிவிலும் தலா 25 பேர்களுக்கு பதக் கங்கள் அணிவிக்கப்பட்டது. அமைச்சர் செங்கோட்டையன் சார்பில் போட்டியில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் தலா ரூ.100 ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

;