tamilnadu

தென்னையில் ரூக்கோஸ் வைரஸ் தாக்குதல் அதிகரிப்பு பேரிடர் பாதிப்பாக அறிவிக்கக் கோரிக்கை

ஈரோடு,ஜன 26- ஈரோட்டில், ஞாயிறன்று தமிழ்நாடு  கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில்  தென்னை மரத்தை தாக்கும் ரூக்கோஸ்  வைரஸை தடுக்க அரசு நடவடிக்கை எடுக் கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி தலைமை வகித் தார். மாநில அமைப்பாளர்கள் இல.கதிரே சன், சிப்பி முத்துரத்தினம், தமிழ்சேரன் உட்பட பலர் உரையாற்றினர். இக்கூட்டத்தில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில், தென்னை மரங்களில் ரூக்கோஸ் வெள்ளை  ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. தற்போது கொங்கு மண்டலத்தை கடந்து,  டெல்டா மாவட்டத்திலும், இதன் பாதிப்பு  அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தென்னை மரங்கள் குறைந்து வரும் நிலையில், ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ தாக்கு தல் மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, இத்தாக்குதலை பேரிடர் பாதிப்பாக அறிவித்து, தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் பாதிப்பு அதிகரித் தால், எண்ணெய் இறக்குமதி அதிகரிக் கும். எண்ணெய் விலை உயரும். எனவே,  அதற்கு முன்னதாக, தாக்குதலை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுத்து, தென்னையை யும், தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

;