tamilnadu

வெல்லச் சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை துவக்கம்

ஈரோடு, ஜூன் 11- வெல்லச் சந்தைக்கு வெளிமாவட்ட வியா பாரிகள் வந்த போதிலும், தேவை குறைவால் விலை உயராததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்ற மடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கு விளையும் கரும்புகள் பெரும்பாலும் சர்க்கரை ஆலை களுக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரி்க்கப்பட்டு சித்தோடு, கவுந் தப்பாடி வெல்லச் சந்தை மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெல்லச் சந்தை மூடப்பட்டது. இதனையடுத்து ஊரடங்கால் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த வாரம் முதல் சித்தோடு சந்தை மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த வாரத்தில் வெளி வியாபா ரிகள் வருகையற்று குறைந்து காணப்பட்டது.

மண்டல அளவிலான போக்குவரத்து துவக்கத் தால் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை அதிகரித்த போதிலும், விலை உயராததால் உற் பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து வெல்லம் தயாரிப்பாளர்கள் கூறு கையில், ஈரோடு மாவட்டத்தில் நாட்டுச் சர்க்கரை அதிகமாக தயாரிக்கப்படுகிறது. முள்ளாம்பரப்பு, காங்கேயம், தாராபுரம், வடபழனி பகுதிகளில் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்படும். இதே போல் பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிக்கப் படுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகமாக வந்து வெல்லத்தை கொள்முதல் செய்தனர். ஊரடங் கால் வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது. நடப்பு வாரத்தில் வெளி வியாபாரி கள் வருகை ஓரளவு உள்ளது. ஆனாலும்,விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தனர்.

;