tamilnadu

img

இனி அணுசக்தி ஒப்பந்த வரம்புகளுக்கு கட்டுப்பட போவதில்லை - ஈரான் அறிவிப்பு

இனி அணுசக்தி ஒப்பந்த வரம்புகளுக்கு கட்டுப்பட போவதில்லை என்று ஈரான அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டு புரட்சி படையின் தலைவர் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி கடந்த கொலை செய்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கர் மீதோ அல்லது எங்கள் சொத்துகள் மீதோ கையை வைத்தால் நடப்பதே வேறு என்றும் ஈரானில் உள்ள 52 இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் (ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன்) ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள வரம்புகளுக்கு கட்டுப்பட போவதில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் ஈரானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.
 

;