tamilnadu

img

இலங்கை வெடிகுண்டுகளுடன் வாகனங்கள் புகுந்ததாக வெளியான தகவலால் பொது மக்கள் அச்சம்

இலங்கையில் வெடிகுண்டுகள் நிரம்பிய ஒரு லாரி , ஒரு வேன் மற்றும் 2 கார்கள் புகுந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

இதையடுத்து நேற்று வாகனத்தில் இருந்த வெடிபொருளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலிஎண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகலில் இலங்கையில் வெடிகுண்டுகளுடன் ஒரு லாரி , ஒரு வேன் மற்றும் 2 கார்கள் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து காவல் நிலையங்களும் உஷார் இருக்குமாறு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் இருந்து இலங்கையின் மற்ற காவல்நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை முழுவதும் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


;