tamilnadu

img

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்கள்  சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு 

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இலங்கையின் 8-ஆவது ஜனாதிபதி தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 7 தொடங்கிய வாக்குப் பதிவு  மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். மேலும் 35 வேட்பாளா்கள் களத்தில்  போட்டியிடுகின்றனா். இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றுள்ளனா். 
இந்நிலையில், மன்னார் பகுதியில் வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களுடன் வந்துகொண்டிருந்த 2 பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில்  நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இலங்கை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

;