tamilnadu

img

சிபிஎம் செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் வகையில் பாஜக அரசு  கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை உடனே திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் சிபிஐ மாநிலச் செயலாளர் ஆ.மு.சலீம், சிபிஎம் செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், சிபிஐ-எம்எல் கட்சியின் மாநில நிர்வாகி சோ.பாலசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி பஷிர் ஆகியோர் உரையாற்றினர்.