tamilnadu

img

வன்முறையாளர்களுக்கு ஆதரவாக தில்லி காவல்துறை செயல்படுகிறதோ?

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா சந்தேகம்

கோவை, பிப். 29– தில்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை பார்க்கையில் வன்முறை யாளர்களுக்கு ஆதரவாக தில்லி  காவல் துறையினர் செயல்படுகின்ற னரோ என்கிற அச்சம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.  இதுதொடர்பாக கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில், குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதி ராக தில்லியில் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். நாடாளுமன்றத் திலும் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி இது சட்டமாக்கப்பட்டுள்ளது. குடி யுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானது மட்டுமல்ல. ஏழை,  எளிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானது. இந்திய இறையாண்மைக் கும், அரசியலமைப்புக்கும் எதிரா னது.  தில்லி வன்முறையில் இறந்த பாதி பேர் துப்பாக்கி குண்டுகளால்தான் இறந்துள்ளார்கள். இந்த கலவரம் குறித்து முழுமையான விசாரணை நடத் தப்பட வேண்டும். எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமித்ஷா  கூறிவருகிறார். வன்முறையாளர்க ளுக்கு ஆதரவாக தில்லி காவல்துறை  செயல்படுகிறதோ? என்கிற அச்சம் எங்க ளுக்கு எழுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகா ரத்தில் குடியரசு தலைவர் தலையிட வேண்டும். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  தில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு இழப்பீடும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை மற்றும் வசதியில்லா மல் தவித்து வரும் அவர்களுக்கு போதிய சிகிச்சைகளையும், வசதிகளை யும் செய்து தர வேண்டும். இந்திய பொரு ளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. மேலும், மத்திய அரசு மக்க ளின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இந்தியாவின் எதிர் காலம் எப்படி இருக்க போகிறதோ? என்கிற அச்சம் எழத்துவங்கியுள்ளது.  மேலும், ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் கண்ணையா குமாரின் மீது தேச துரோக வழக்கு பதிய தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு பின் உள்ள அர சியல் என்ன என்பதை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் விளக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங் கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாக வும் சந்திப்போம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

;