tamilnadu

img

போலீசை ஏவியது அதிமுக அரசு

மாதர் சங்க நடைபயணம் மீது வன்முறை

உ.வாசுகி, பி.சுகந்தி,  எஸ்.வாலண்டினா,  கே.பாலபாரதி உள்ளிட்ட  அனைவரும் கைது

சென்னை, டிச. 4 - பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், மதுக்கடைகளை மூடவும் கோரி தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினரை புதனன்று (டிச.4) தாம்பரத்தில் தடுத்து நிறுத்தி போலீசார் அராஜகமான முறையில் கைது செய்தனர். போலீசார் நடத்திய பலப் பிரயோகத்தால் மாதர் சங்க மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டது. “வன்முறையற்ற, போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம்’’ என்ற முழக்கத்துடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நவ.25 அன்று வடலூர், திருவண்ணா மலை ஆகிய இடங்களில் இருந்து கோட்டை நோக்கி 400 கி.மீ நடைபயணம் தொடங்கியது. வடலூரிலிருந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையிலான குழுவும், திருவண்ணாமலையிலிருந்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையிலான குழுவும் கடந்த 9 நாட்களாக சுமார் 360 கி.மீ தூரத்தை கடந்து டிச.3 அன்று சென்னை நுழைவாயிலான தாம்பரத்தை வந்தடைந்தனர். 

தடைகள் தகர்ப்பு

நடைபயணத்தின் 10வது நாளான புதனன்று (டிச.4) காலை தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள (ஜிஎஸ்டி சாலை) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை தொடர இருந்தனர். ஆனால், நேஷனல் தியேட்டர் அருகே பயணக்குழுவினர் தங்கி இருந்த மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் நடை பயணத்திற்கு தடை விதித்தனர். அங்கு அதிக எண்ணிக்கையில் ஆண் காவலர்களை குவித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சங்கத் தலைவர்கள் உ.வாசுகி, எஸ்.வாலண்டினா, பி.சுகந்தி, கே.பால பாரதி, என்.அமிர்தம், எஸ்.கே.பொன்னுத்தாய், ஏ.ராதிகா, வி.பிரமிளா உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகும் காவல்துறை அனுமதி தரவில்லை. எனவே, மாதர் சங்கத்தினர் தடையை மீறி மண்டபத்தி லிருந்தே  நடைபயணத்தை தொடங்கினர். நடைபயணத்தை தடுத்து நிறுத்த முற்பட்ட ஆண் போலீசார், மாதர் சங்கப் பெண்களுடன் கடுமையான தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். தடைகளை உடைத்துக் கொண்டு பெண்கள் முன்னேறிச் சென்றனர். ஆண் காவலர்களுடன் பெண் காவலர்களும் கயிற்றை பெண்கள் மீது வீசி  சுற்றி இறுக்கி தடுத்து நிறுத்தினர். இத்தகைய அரா ஜகத்தை ஏவிவிட்டு, காவல்துறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காட்டுமிரண்டித்தனம்

 இதனைத் தொடர்ந்து பயணக்குழுவின் ஒரு பகுதியினர் உ.வாசுகி, பி.சுகந்தி, எஸ்.வாலண்டினா தலைமையில் தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடு பட்ட பெண்கள் மீது காவல்துறையினர் வன் முறைப் பிரயோகம் செய்தனர். பெண்களை சுற்றி  கயிறுகளை கட்டி இறுக்கினர். பெண்களின் கை களை முறித்தும், நெஞ்சில் குத்தியும், பூட்ஸ்  கால்களால் கால்களை மிதித்தும், உடைகளை கிழித்தும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் போட்டனர். அதன்பிறகு அனைவரையும் நகராட்சி சமூக நலக்கூடத்தில் கொண்டு சென்று அடைத்தனர். இந்த வன்முறைத் தாக்குதலில் புதுக் கோட்டையை சேர்ந்த ஓவியா(19)வின் கழுத்தில் கயிற்றை போட்டு போலீசார் இறுக்கி யதில் அவரது கழுத்து திருப்ப முடியவில்லை.  மதுரை மாநகரை சேர்ந்த சரஸ்வதி (60), இந்தி ராணி (65) ஆகியோரின் கைகளை அசைக்க முடியாமல் துடித்தனர். பெரம்பலூரை சேர்ந்த கலையரசி (40), விழுப்புரத்தை சேர்ந்த நீலா (45) ஆகியோர் நெஞ்சுவலிக்கு உள்ளாகினர். வடசென்னையை சேர்ந்த பிரேமாவதி ரத்த அழுத்தத்திற்கு உள்ளானார். இவர்கள் அனைவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அருகதையற்ற அரசு

அதேநேரத்தில் மண்டபம் அருகே கே.பால பாரதி, எஸ்.கே.பொன்னுத்தாய், ராதிகா, பிரமிளா உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீண்டும் உடைத்துக் கொண்டு காந்தி சாலையை நோக்கி முன்னேறிச் சென்றனர். அங்கு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் கைது  செய்த போலீசார் நகராட்சி சமூக நலக்கூடத் திற்கு கொண்டு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் கே.பால பாரதி கூறுகையில், “3வயது சிறுமிக்கு கூட  தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடையை 50 மீட்டர் தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என்பதை தற்போது 40 மீட்டர் என  குறைத்துள்ளனர். காவல்துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. பலவகை யான போதைக்கு இளைய சமுதாயம் உள்ளாகிறது. இதுகுறித்தெல்லாம் பேச முதலமைச்சரை சந்திக்க இரண்டு குழுக்கள் 10 நாட்கள் நடைபயணமாக வந்தோம். அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. மாறாக, பெண்கள் மீது அரசே வன்முறையை ஏவுகிறது. இரண்டு தூறல் விழுந்தால் சென்னை யில் நடக்க முடியவில்லை. அந்தளவிற்கு சாலை கள் மோசமாக உள்ளது. அந்தச்சாலையில் கூட பெண்களை நடக்கவிட மறுக்கிறார்கள். இது என்ன நியாயம்? அதிமுக அரசு மக்கள் முன்  நிற்க அருகதையற்றுப் போய்விட்டது. இன்றைய நடைபயணத்தை வேண்டுமானால் கைது நட வடிக்கை மூலம் தடுத்து நிறுத்தலாம். ஆனால், வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் அமை யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

முதலமைச்சரே பொறுப்பு

சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா கூறுகையில், “தமிழக முதலமைச்சர் மாதர் சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். போலீசார் அராஜக மான முறையில் நடந்து கொண்டனர். பெண் களை மிதித்து, கால்களை நசுக்கி காயப்படுத்தி யுள்ளனர். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கைது  செய்த பெண் தோழர்களை இரவு 7  மணி வரைக்கும் காவல்துறையினர்  மண்டபத்தி லேயே அடைத்து வைத்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தென்சென்னை மாவட்டச் செயாலாளர் ஏ.பாக்கி யம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முரு கன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லகண்ணு, பொதுச் செயலாளர்  கே.சாமுவேல்ராஜ், விவசாய தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

 


மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோரை காவல்துறையினர் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்த காட்சிகள். (3வது படம்) காவல்துறை போட்ட தடுப்புக் கயிறை மீறி, தடையை உடைத்து முன்னேறும் மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், வி.பிரமிளா உள்ளிட்டோர்.


 

;