சென்னை:
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் நோக்கமே சிதைக்கப்பட்டுவிட்டது என்றும், 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளின் சமூக தணிக்கையில் ரூ. 4000 கோடிக்கு மேல்ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்து ள்ளதால் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைமீதான விவாதத்தில் (ஆக.16 திங்க ளன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பேசியது வருமாறு:
நன்றியும்-பாராட்டும்
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு நூற்றாண்டை கடந்து செல்கின்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றத்தில் பங்கேற்று மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தந்த இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-க்கும், என்னை வெற்றி பெறச் செய்தகந்தர்வக்கோட்டை தொகுதி மக்க ளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கந்தர்வகோட்டை எங்கள் கோட்டைஎன்று கடந்த காலத்தில் ஆர்ப்பரித்த நிலைமை மாற்றப்பட்டு, ஆதி மனிதன் வாழ்க்கைத் தொடங்கி இன்றளவும் அந்தியோதயா, அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வாழும் கடைக்கோடி ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த என்னை வெற்றி பெறச் செய்வதற்கு தேர்தல்பரப்புரையாற்றிய தமிழக முதலமைச்சர். கீரனூரில் பல்லாயிரக்கணக் கான மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றியை நிலை நிறுத்திய சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் பரப்புரைசெய்த கூட்டணி கட்சியின் தலைவர்கள், புதுக்கோட்டை வடக்கு மாவட்டபொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டி யன் மற்றும் சமூக ஆர்வலர்கள், தன்னலம் கருதாது பணியாற்றிய வாலிபர்கள், மாணவர்கள், மாதர்கள், தொழிலாளர்கள் மற்றும் கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
துணிச்சல் மிக்க முதல்வர்!
கொரோனா பெருந்தொற்று மனித வாழ்வியலையே புரட்டிப்போட்டு விட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் கஜானா காலியாகி தமிழக பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்பட்டது. இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து, வஞ்சித்து வருகிறது. இத்தகைய நெருக்கடியிலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு எப்படி கடந்து செல்லப்போகிறது என்று ஊராரும், உலகோரும் உற்றுநோக்கி கவனித்தனர்.100 நாட்களில் அயராத உழைப்பால் பணியாற்றி கொரோனாவை பின்னோ
க்கித் தள்ளியமைக்காகவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சவால்களை எதிர்கொள்வோம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீன பழமொழி...
“பத்தாண்டுகள் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட, ஒரு நாள் பார்த்து தெரிந்து கொள்வது சிறப்பு என்பது” சீனத் தேசத்து பழமொழியாகும். கடந்த10 ஆண்டுகளில் கேட்டுத் தெரிந்ததை விட நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை பார்த்து தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்க தாகும். தமிழகத்தின் பொருளாதாரம் சீரடைய குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும் என நிதி வரவு - செலவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்கிறோம்.
டைடல் பார்க்-சிப்காட்
அனுதினமும் உயர்ந்து கொண்டே இருக்கிற பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இந்தநிலையில், கடுமையான நிதி நெருக்கடியிலும் பெட்ரோல் மீதான மாநில வரியை தமிழக அரசு ரூ. 3 குறைத்துள்ளது பாராட்டத்தக்க தாகும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட டைட்டல் பூங்கா, 9 சிப்காட் வளாகங்கள் அறிவிப்பு செய்திருப்பது வரவேற்கக் கூடியது.
புதுக்கோட்டைக்கு தொழிற்பூங்கா!
அதே நேரத்தில் மிகவும் பின்தங்கிய,“வான் மழையை நம்பி வாழும், வேலைவாய்ப்பற்று வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று உழைத்து வருகிற பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
நம்பிக்கை ஒளி...
அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தியதும் வரவேற்கக் கூடியதாகும். அதேபோல், சாதாரண நகரப் பேருந்தில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு செய்த தமிழகமுதலமைச்சரை தமிழக பெண்கள் வாழ்த்துகின்றனர். நெருக்கடியான நிலையிலும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகையை வழங்க வேண்டும்.ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. பங்கீட்டுத்
தொடர்ச்சி 3ம் பக்கம்