tamilnadu

img

வெண்மணி தியாகிகளுக்கு எழுச்சிமிகு வீர வணக்கம்

51-வது ஆண்டு நினைவு நாள்

நாகப்பட்டினம், டிச.25- வெண்மணி வீரத் தியாகிகளின் 51-வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்ச்சிகள் டிசம்பர்-25 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில், வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் நாகை மாவட்டச்  செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு முன்பு, அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுச்சி முழக்கங்களுக்கு இடையே  செங்கொடியை ஏற்றி வைத்தார். 

தொடர்ந்து, தியாகிகள் நினைவு ஸ்தூபிக் கும், நினைவகத்தில் உள்ள நினைவுச் சின்னத் திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்,  விவசாயிகள் சங்க  பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், விதொச மாநிலப் பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்கம்செலுத்தினர். வெண்மணி தியாகிகள் நினைவாலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள 44 அடி உயரக் கொடிக் கம்பத்தில், சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் சிஐடியு கொடியை ஏற்றி  வைத்தார். அஞ்சலி நிகழ்ச்சியில் வி.தொ.ச. மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.மீரா, கீழ்வேளூர் ஒன்றியச் செய லாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் உறுப்பினர்கள், நிர்வாகிகள், தலை வர்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களின் தலை வர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

44 நெல்மூட்டைகள்

44 வெண்மணி தியாகிகள் நினைவாக, சிஐ டியு சார்பில் ஆண்டுதோறும், இந்நினைவு நாளில் 44 நெல்மூட்டைகள் வழங்கப்பட்டு வரு கின்றன.  இவ்வாண்டும் 44 நெல் மூட்டை களை அரசுப் போக்குவரத்து சிஐடியு ஊழியர் சம்மேளன  பொதுச் செயலாளர் கே.ஆறு முக நயினார், சிஐடியு நாகை மாவட்டச் செய லாளர் சீனி.மணி, மாவட்டத் தலைவர் பி.ஜீவா ஆகியோர் வழங்கிட,  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பெற்றுக்கொண்டார்.

சென்னை நிர்மல் பள்ளிக்கு நன்கொடை

சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்திவரும் நிர்மல் உயர்நிலைப் பள்ளி, தமிழ்ப்  பயிற்று மொழிப் பள்ளியாகும். மாணவ மாணவியருக்குத் தனியே ஆங்கிலம் பயிற்று விக்கப்படுகிறது. கடந்த ஆண்டில், இந்தப் பள்ளி, அரசுப் பொது தேர்வில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியின்  வளர்ச்சிக்காக, நாகை மாவட்டம் உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில், குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.பி.வசந்தி ரூ.10,000- வழங்கினார்.

 உண்டியல் நிதி

சிபிஎம் மதுரைப் புறநகர் மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம்,  முடுவார்பட்டி  ஜானகி அம்மாள் கிளை சார்பில், பல மாதங் களாக ஊழியர்கள், பொதுமக்கள் திரட்டிய பெரும் தொகையுடன் கூடிய பெரிய உண்டி யலோடு அதன் சாவியை, அந்தக் கிளையின் தோழர்கள் வழங்கிட மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டனர்.

பொதுக்கூட்டம்

வெண்மணி நினைவாலய முகப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வி.ச. மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான அ.சவுந்தரராசன், சிபிஎம் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் நன்றி கூறினார். டிசம்பர்-25, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சா ரத்தின் இறுதிநாள், மற்றும் முதல்நாள் இரவி லிருந்து காலை வரை நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்த போதிலும், வெண்மணிக்கு ஆயிரக்கணக்கில் பல்வேறு இயக்கத்தினரும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.



 

;